alter Click Here To Book Somnath Vastra Prasad

Saurashtra Tamil Sangamam

Shree Somnath Trust
Shree Somnath Trust

Chairman, Shree Somnath Trust

Shree Somnath is first among the twelve Aadi Jyotirlings of India It has a strategic location on the western coast of India. Ancient Indian traditions maintain a close relationship of Somnath with release of Chandra (Moon God) from the curse of his father-in-law Daksha Prajapati. Moon was married to Twenty-Seven daughters of Daksha. However, he favoured Rohini and neglected other queens. The aggrieved Daksha cursed Moon and the Moon lost power of light. With the advice of Prajapita Brahma, Moon arrived at the Prabhas Tirth and worshipped Bhagvan Shiva, Pleased with the great penance and devotion of Moon, Bhagvan Shiva blessed him and relieved him from the curse of darkness. Pauranic traditions maintain that Moon had built a golden temple, followed by a silver temple by Ravana. Bhagvan Shree Krishna is believed to have built Somnath temple with Sandalwood. The research based on ancient Indian classical texts show that first Somnath Jyotirling Pran-Pratistha was done on the auspicious third day of brighter half of Shravan month during the tenth Treta yug of Vaivswat Manvantar. Swami Shri Gajananand Saraswatiji, Chairman of Shrimad Aadhya Jagadguru Shankaracharya Vedic Shodh Sansthan Varanasi suggested that the said first temple was built 7.99.25,105 years ago as derived from the traditions of Prabhas Khand of Skand Puran. Thus, this temple is a perennial source of inspiration for millions of Hindus since time immemorial. The Moon God is said to have been relieved from the curse of his father-in-law Daksha Prajapati by the blessings of Bhagvan Somnath in the Shiva Purana and Nandi Upapurana. Shiva said, I am always present everywhere but specially in 12 forms and places as the Jyotirlingas. Somnath is one of these 12 holy places. This is the first among the twelve holy Shiva Jyotirlings. The later sources of history account for several desecrations by Muslims invaders during eleventh to eighteen century AD. The temple was rebuilt every time with the reconstructive spirit of the people The modern temple was reconstructed with the resolve of Sardar Patel who visited the ruins of Somnath temple on November 13 1947. On 19th April, 1950, the Bhumikhanana Vidhi" was performed by Shri. U.N. Dhebar the then Chief Minister of Saurashra State. There after on 8 May 1950 Maharaja Jam Saheb Digivijaysinhji laid the foundation stone of the New Temple Of Somnath. Then President of India, Dr Rajendra Prasad, did the Pran-Pratistha at the existing temple on 11 May 1951. The Construction of new temple of Somnath was Completed under the benign guidance of Maharaja Jamsaheb. The New Temple was built in stages. The Work of the Construction of the temple was executed according to the approved plan prepared by Shri Prabhashankar Sompura. There were three main parts Garbha Griha with Shikhar, Sabhamandap and Nrityaandap of the New temple. Out of these, the construction of the first two parts were completed On 7 May 1965, Maharaja Jamsaheb Digvijaysinhji began the ceremony of Kalasha Prathistha, Dhvajaropana and Maharudra Yagna. Maharaja Jamsaheb Digvijaysinhji hoisted a precious silken flag on the New temple of Somnath. The Fully reconstructed Temple was dedicated to the Nation by Hon. Dr. Shankar Dayal Sharma, the then President of India on 1" December 1995. Let us join our hands & come together to make Somnath temple glorious & divine once again. During its golden age, Somnath temple was developed as place of knowledge, worship, art & heritage. Let us resolve to strive hard for returning the golden age at somnath.

இந்தியாவின் 12 ஆதி ஜோதிர்லிங்கங்களில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சோம்நாத் முதன்மையானது. இந்திய புராணங்களின் படி சந்திரன் தனது மாமனார் தக்க்ஷ பிரஜாபதியின் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டதற்கும் சோமநாத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தக்‌ஷாவின் 27 மகள்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் 27 பேரில் அவர் ரோஹினியின் மேல் மட்டும் அதிக அக்கரை கொண்டவராக இருந்துள்ளார். மற்ற ராணிகளை புறக்கணித்ததால் கோபமடைந்த தக்க்ஷ பிரஜாபதி ஒளியின் சக்தியை இழப்பாய் என சந்திரனை சபித்தார். பிரஜாபிதா பிரம்மாவின் ஆலோசனையின் படி, சோம்நாத்தில் உள்ள பிரபாஸ் தீர்த்தத்துக்கு வந்த சந்திரன், அங்கு பகவான் சிவனை வணங்கினார். சந்திரனின் கடும் தவத்தாலும், பக்தியாலும் மகிழ்ந்த பகவான் சிவபெருமான், அவரை இருளின் சாபத்திலிருந்து விடுவித்து சாப விமோசனம் அருளினார். சந்திரன் அங்கு தங்கத்தால் ஆன கோவிலை கட்டியதாகவும், அவரைத்தொடர்ந்து ராவணன் அங்கு வெள்ளியால் ஆன கோவிலை கட்டியதாகவும் புராண கதைகள் கூறுகின்றன. மேலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சந்தன மரத்தால் சோம்நாத் கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. பண்டைய இந்திய பாரம்பரிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, முதல் சோம்நாத் ஜோதிலிங்கம், வைஸ்வத் மன்வந்தர் ஸ்வாமிகளின் பத்தாவது த்ரேதா யுகத்தில் ஸ்ரவண மாதத்தின் பிரகாசமான காலத்தின் மூன்றாவது நாளன்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஸ்கந்த புராணத்தின் பிரபாஸ் காண்டத்தில் புராணங்களில் இருந்து பெறப்பட்ட தகவில்களின் படி முதல் சோம்நாத் கோவில் 7 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 105 ஆண்டுகளுக்கு முன் நிருவப்பட்டதாக வாரணாசி ஸ்ரீமத் ஆத்ய ஜகத்குரு சங்கராச்சாரியார் வேத ஷோத் சமஸ்தானத்தின் தலைவர் ஸ்வாமி ஸ்ரீ கஜானந்த சரஸ்வதி தெரிவித்தார். இந்த தகவல்களில் இருந்து சோம்நாத் ஆலயம் ஆதிகாலத்தில் இருந்தே லட்சக்கணக்கான இந்துக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக விளங்கியுள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது. பகவான் சோமநாதரின் அருளால் சந்திரன், தனது மாமனார் தக்‌ஷ பிரஜாபதியின் சாபத்தில் இருந்து விடுபட்டதாக சிவபுராணம் மற்றும் நந்தி உபபுராணங்களில் கூறுப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் அனைத்து காலங்களிலும் இருக்கும் தன்னை, ஜோதிலிங்கமாக, 12 வடிவங்களில், 12 ஸ்தலங்களில் தரிசிக்க முடியும் என சிவபெருமான் கூறியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. 12 புனித சிவ ஜோதிலிங்கங்களில் முதன்மையானது என்ற பெருமையை சோம்நாத் பெற்றுள்ளது. 11 ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்புகளால் பல அழிவுகளுக்கு சோம்நாத் கோவில் உட்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் மக்கள் மனோபலத்துடன் கோவிலை புனரமைத்ததுள்ளனர். 1947 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள், சோம்நாத்தின் இடிபாடுகளைக் கண்ட திரு. சர்தார் படேல் அதனை புனரமைக்க உறுதி பூண்டார். தற்போது உள்ள நவீன கோவில் திரு. சர்தார் படேலின் உறுதியான முடிவால் உருவானது. 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி அப்போதைய செளராஷ்ரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த திரு. யு.என்.தேபர், பூமி பூஜை செய்தார். அதன் பின் அதே ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் மகராஜா ஜாம் சாஹேப் திக் விஜய்சிங், சோம்நாத் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் அப்போதைய ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத், 1951 ஆம் ஆண்டு மே 11ஆம் நாள் கோவிலுக்கு பிராண பிரதிஷ்டை செய்தார். மஹாராஜா ஜாம் சாஹேப்பின் உயரிய வழிகாட்டுதலின் கீழ் சோம்நாத் புதிய கோவிலின் கட்டுமானம் முடிக்கப்பட்டது. புதிய கோவிலின் கட்டடங்கள் பல கட்டங்களாக கட்டப்பட்டன. ஸ்ரீ பிரபாசங்கர் சோம்புராவால் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின்படி கோவிலின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கர்ப்ப கிரஹத்துடன் உள்ள ஸ்தூபம், சபா மண்டபம், நாட்டிய மண்டபம் ஆகியவை புதிய கோவிலின் மூன்று முக்கிய பகுதிகளாக இருந்தன. இவற்றில் முதல் இரண்டின் கட்டுமானம் 1965ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் முடிக்கப்பட்டன. கலச பிரதிஷ்டை, கொடியேற்றம் மற்றும் மஹாருத்ர யாகம் ஆகியவற்றை மகாராஜா ஜாம் சாஹேப் திக் விஜய்சிங் தொடங்கி வைத்தார். புதிய சோம்நாத் ஆலயத்தில் விலைமதிப்பற்ற பட்டுக்கொடியை அவர் ஏற்றினார். முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட சோம்நாத் கோவிலை, 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் நாள், அப்போதைய இந்திய ஜனாதிபதி டாகடர் ஷங்கர் தயாள் ஷர்மா நாட்டுக்கு அர்ப்பணித்தார். அறிவு, வழிபாடு, கலை மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக சோம்நாத் ஆலயம், அதன் பொற்காலத்தில் திகழ்ந்தது. அதன் மகிமை மற்றும் தெய்வீகத்தனமையை போற்றி, சோம்நாத்தில் பொற்காலத்தை மீண்டும் கொண்டு வர நாம் அனைவரும் கைகோர்ப்போம்.